NEWS

Search This Blog

Sunday, 28 January 2018

வேலைவாய்ப்பு பதிவு அட்டையில் *(Employment Card)* ஏதேனும் பிழைகளோ, திருத்தங்களோ இருந்தால் நீங்களாகவே அதனை திருத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.

கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!
தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு அட்டையில் *(Employment Card)* ஏதேனும் பிழைகளோ, திருத்தங்களோ இருந்தால் நீங்களாகவே அதனை திருத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.
*Name, Address, Seniority_Date, Subject / Major, DOB* போன்றவைகள் பிழையாக அல்லது மாறுதலாக இருக்கும் பட்சத்தில் அவைகளை நீங்களாகவே திருத்தம் செய்ய வேண்டாம்.
நீங்களாகவே பிழைகளை திருத்தும்போது உங்களுடைய பதிவுமூப்பு *(Seniority Date)* தேதியை இழக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள். பிறகு, அதனை மாற்றுவது இயலாத ஒன்றாகிவிடும்.
புதிதாக பதிபவர்கள் வேலைவாய்ப்பு தகவல் சார்ந்த முன் அனுபவம் உள்ளவர்களின் உதவியுடன் தங்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை பதிவிடவும்.
ஏனெனில், பெரும்பாலானோர் தாங்களாகவே இணையத்தில் பதியும்போது பிழைகளுடனேயே பதிகின்றனர்.
சிலர், முதுநிலை *(PG)* சார்ந்த படிப்புகளை சென்னை (வட மாவட்டங்கள்) மற்றும் மதுரை (தென் மாவட்டங்கள்) ஆகிய மண்டலங்களில் முறையாக பதிவதில்லை. மாறாக, முதுநிலை பட்டப்படிப்புகளை தங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு அட்டையுடன் *(in UG)* பதிந்துகொண்டுள்ளனர்.
இது முற்றிலும் தவறான செயல்முறையாகும். இரண்டு (அ) மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே முதுநிலை பட்டங்களை முடித்தபோதிலும் இன்னும் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதியாமல் இருப்பது வேலைவாய்ப்பினை இழக்க வழிவகை செய்துவிடுகிறது.
மேலும், முதுநிலை *(PG)* பட்டத்துடன் *BEd + MEd* போன்றவற்றினையும் தவறாமல் பதியவும். அதாவது இளநிலை மற்றும் முதுநிலை வேலைவாய்ப்பு பதிவுகள் இரண்டும் தனித்தனி நிலையைச் சார்ந்தவையாகும்.
*UG+BEd* மற்றும் *PG+BEd* இவைகளின் பதிவுமூப்புகள் *(Seniority)* ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவையாகும். இதனால், கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சார்ந்த பதிவுகளில் *(Employment Registration)* தெளிவாக இருத்தல் அவசியமாகும்.
பிழைகள், திருத்தங்கள் போன்றவற்றை *Seniority Date* மாறாமல் திருத்திக்கொள்ள சம்பத்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து மெய்சான்றிதழ்களுடன் *(ORIGINALS)* நேரில் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
அங்கு *DATA PURIFICATION FORM* என்ற படிவத்தில் தங்களுடைய விபரங்களையும் மற்றும் பிழைகள் / திருத்தங்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டு வேலைவாய்ப்பு அலுவலரிடம் கொடுக்கவும்.
ஓரிரு வேலைநாட்களில் உங்கள் பிழைகள் *(Mistakes) / திருத்தங்கள் (Corrections)* பதிவுமூப்பு தேதி மாறாமல் முழுமையாக சரிசெய்யப்படும்.
அவ்வப்போது தங்களுடைய *Employment Renewal* மற்றும் பிற தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும். மேலான தகவல்களுக்கு சம்பத்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும். இழப்புகளை தவிர்க்கவும்.

ADSENCE ADD