அண்ணா பல்கலை., தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு குறித்து மாணவர்களுக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை
*சென்னை அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்*
*593 பொறியியல் கல்லூரிகளின் தலைமையிடமாக உள்ள சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் மூன்று லட்சத்து 2 ஆயிரம் பேர் மறு மதிப்பீடு செய்யக் கோரி விண்ணப்பம் செய்தனர்*
*அவர்களில் 90 ஆயிரம் பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்*
*வழக்கத்தை விட மிக அதிகமானவர்கள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், பல்கலை கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, உள்ளிட்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்*
*அண்ணா பல்கலை., தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு ரூ.240 கோடி வரை பணம் கைமாறி உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் பல்கலை கழகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்*
*இது தொடர்பாக மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்*
*24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் தரப்பட்டிருப்பதால் சந்தேகம்*
*மறுமதிப்பீட்டில் 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது*
*இந்நிலையில், இதுகுறித்து 50 மாணவர்களுக்கு சம்மன் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது*