NEWS

Search This Blog

Wednesday, 19 September 2018

பிளஸ் 1 மதிப்பெண் உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்:பா.ம.க


*பிளஸ் 1 மதிப்பெண் உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்:பா.ம.க., இளைஞரணி மாநில தலைவர், அன்புமணி*


*உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு, பிளஸ் 1 மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என, பிறப்பித்த உத்தரவை,
அரசு உடனே திரும்ப பெற வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி மாநில தலைவர், அன்புமணி கூறியுள்ளார்*


*அவரது நேற்றைய அறிக்கை*


*பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்ற, அரசின்அறிவிப்பு, அனைவரிடமும் வரவேற்பைபெற்றது.பொதுத்தேர்வு மதிப்பெண்களை ஒன்றாக கணக்கிட்டு, உயர்கல்வி சேர்க்கை நடத்தினால் தான், பிளஸ் 1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்*

*பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்கள், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் *எடுக்கப்படாது' என்ற*
*அரசின் அறிவிப்பு, பொதுத்தேர்வு*
*அறிவிக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைத்து விடும்*

*தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்துவிடும்*


*எனவே உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு, பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படாது என்ற உத்தரவை, தமிழக அரசு, உடனே திரும்ப பெற வேண்டும், என கூறியுள்ளார்*

ADSENCE ADD