NEWS

Search This Blog

Wednesday, 19 September 2018

*நுழைவு தேர்வுக்கு 229 இலவச பயிற்சி மையம்*


*நுழைவு தேர்வுக்கு 229 இலவச பயிற்சி மையம்*


மத்திய அரசின்,
'நீட்' மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்துஉள்ளது.


பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., என்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இதுவரை, சி.பி.எஸ்.இ., வழியாக, ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல், என்.டி.ஏ., என்ற, தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட உள்ளது.



கடந்த கல்வி ஆண்டு வரை, எழுத்து மற்றும், 'ஆன்லைன்' என, இரண்டு முறைகளில் தேர்வுகள் நடந்தன.



 இந்த ஆண்டு, ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆண்டுக்கு, இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது.


முதல் கட்ட ஆன்லைன் தேர்வு, 2019 ஜனவரியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கியது; வரும், 30ம் தேதி முடிகிறது.


இந்த தேர்வில், அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுவதற்கு, மாணவர்கள், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.


 பல தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.
தனியார் மையங்களிலும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.


 இதற்கு, அதிக கட்டணம் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.எனவே, மத்திய அரசின் சார்பில், இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன


. நாடு முழுவதும், 622 மாவட்டங்களில், 3,046 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 இவற்றில், 2.72 லட்சம் பேர், ஒரே நேரத்தில் பயிற்சி பெறும் வகையில், கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 229 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, 34 ஆயிரம் கணினிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


 மேலும், மத்திய அரசின், என்.டி.ஏ., இணையதளத்தில், நுழைவு தேர்வு பயிற்சிக்கான, 'வீடியோ' பாடங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் இந்திய அறிவியல் நிறுவன உயர் கல்வி பேராசிரியர்கள் நடத்தியுள்ள பாடங்கள், வீடியோ பதிவாக இடம் பெற்றுள்ளன.


இந்த பாடங்களை, என்.டி.ஏ.,வின், www.nta.ac.in/LecturesContent என்ற, இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.- நமது நிருபர்

*SOURCE DINAMALAR WEBSITE*

ADSENCE ADD