பட்டதாரி ஆசிரியர்கள் நவ., 5 முதல் வேலைநிறுத்தம்
*மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 5 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்*
*தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொதுக்குழு கூட்டம், சேலத்தில், நேற்று நடந்தது. மாநில தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்*
*அதில், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஐந்தாவது ஊதியக்குழு முதல், பாதிக்கப்பட்டு வரும் முதுநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட, ஒருநபர் குழு அறிக்கையை, உடனடியாக வெளியிடுதல்; 2004 - 06ல், தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட முதுநிலை ஆசிரியர்களை, நியமன நாள் முதல், பணி வரன்முறை செய்து, அரசாணை வெளியிட வேண்டும்*
*விடுமுறை நாட்களில், 'நீட்' பயிற்சி வகுப்பு நடத்துவதை அரசு கைவிடுவதோடு, அரசாணை, 101ஐ, திரும்ப பெறுதல்; ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு முதுகலை ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதோடு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை, முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்குதல்; ஊதிய முரண்பாடுகளை களைந்து, 21 மாத ஊதிய நிலுவை வழங்கி, புது ஓய்வூதியத்தை ரத்து செய்யாவிட்டால், நவ., 5ல் இருந்து, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன*
*SOURCE DINAMALAR WEBSITE*