NEWS

Search This Blog

Saturday, 22 September 2018

நீட், ஜே.இ.இ. தேர்வு: ஐஐடி பேராசிரியர்களின் விடியோ வகுப்புகள் வெளியீடு

*நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஐஐடி பேராசிரியர்கள்,
நிபுணர்களின் விடியோ வகுப்புகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது*


*நீட், ஜே.இ.இ., நெட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை என்.டி.ஏ. வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது*


 *அதன்படி, 2019 -ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நடத்தப்பட உள்ள நெட், ஜே.இ.இ. (முதல்நிலை) தேர்வு அறிவிப்புகளை என்.டி.ஏ. அண்மையில் வெளியிட்டது.இதில் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும்*


*இதுபோல ஜே.இ.இ. (முதல் நிலை) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கும் செப்டம்பர் 30 கடைசி நாளாகும். அடுத்து நீட் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட உள்ளது*


*இந்த நிலையில், ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பாடவாரியான விடியோ வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகளை என்.டி.ஏ. அதன் www.nta.ac.in.  என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது*


 *இதில் ஐஐடி பேராசிரியர்கள், பாட நிபுணர்கள் ஆகியோரின் வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் பாடவாரியாக இடம்பெற்றுள்ளன*


*SOURCE DINAMANI WEBSITE*

ADSENCE ADD