பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விபரம் இணையதளத்தில் பதிவேற்றம்
*10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விபரம் இணையதளத்தில்
, பதிவேற்றம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன*
*பள்ளி கல்வித்துறைக்காக, மேலாண்மை இணையதளம்- இ.எம். ஐ.எஸ்., துவங்கப்பட்டுள்ளன*
*இதில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் பெயர், பிறந்த தேதி, முகவரி, பள்ளி, பெற்றோர், அவர்களது மொபைல்போன் எண் விபரம், ரத்தவகை, உயரம், எடை போன்ற விபரங்கள், புகைப்படத்துடன் பதிவு செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன*
*இதுகுறித்து, வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது*
*முதற்கட்டமாக, மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மாணவ, மாணவியின் விபரங்கள் சேகரித்து பதிவேற்றம் செய்ய வசதியாக, ஒப்புகை படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த விபரங்கள் சேகரிக்கின்றனர். இதை, சரிபார்த்து, ஒவ்வொரு ஒப்புகை படிவத்திலும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்*
*அதன்பின், பதிவேற்றம் செய்யப்படும். இரண்டாம் கட்டமாக, பிளஸ் 1, 2 க்கும், மூன்றாம் கட்டமாக, ஒன்று முதல், ஒன்பது வரையிலான, மாணவ, மாணவியர் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்*
*இதனால், மாற்றுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தாமதமின்றி பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்*
*SOURCE DINAMALAR WEBSITE*