பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்*
*முன் அனுமதி இல்லாமல் ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் அங்கு திரண்டியதால் நுங்கம்பாக்கம் போலீஸார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். அப்போது உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசிய பின்னரே போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்*
*இதைத் தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்*
*இந்தப் போராட்டம் குறித்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது*
*கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 16,500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது*
*அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 14,500 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்*
*இதையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் ரூ. 2,200 ஊதிய உயர்வு சேர்த்து தற்போது 7,700 எங்களுக்கு சம்பளமாகப் வழங்கப்படுகிறது*
*அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இதுபோன்ற தொகுப்பூதியத்தில் இருப்பவர்களுக்கு ரூ. 16,500 சம்பள உயர்வு கொடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை*
*கடந்த 1996-இல் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 2006-ஆம் ஆண்டு 13,500 பேரை பணி நிரந்தரம் செய்தனர். அதை முன் உதாரணமாக கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது, 12,500 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்*
*அரசின் சார்பில் பணி நிரந்தரம் செய்வது குறித்து உறுதி மொழி அளிக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்*
*SOURCE DINAMANI WEBSITE*