NEWS

Search This Blog

Thursday, 11 October 2018

கடலூரில் 35 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடிவு

தமிழக அரசின் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது*


*இந்த பிரச்னை தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தகுதியான 2 ஆயிரம் ஆசிரியர்கள் தற்காலிக நியமனமாக பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்பப்படுவர் என்றார்*


*அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்ப கல்வித்துறை முடிவெடுத்துள்ளது*


*இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் க.பழனிச்சாமி கூறுகையில், அந்தந்த பள்ளிகள் அளவிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது*


*பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பர்.அவர்களுக்கு மாதம் ரூ.7,500 சம்பளமாக வழங்கப்படும். என்றார்*

*SOURCE DINAKARAN WEBSITE*

ADSENCE ADD