NEWS

Search This Blog

Sunday, 22 September 2019

அரசு ஆணை எண் 166 ன்,....

அரசு ஆணை எண் 166 ன்படி வரக்கூடிய கல்வி ஆண்டில்




நான்கு பாடத்தொகுதிகள் உடன் 3 புதிய பாடத் தொகுதிகள் சேர்ந்து ஆறு பாடங்களுக்குப் பதிலாக ஐந்து பாடங்களாகவும் 600 மதிப்பெண்ணுக்கு பதிலாக 500 மதிப்பெண் ஆகவும் மாற்றம் நடைபெற உள்ளது.
 அதிலும் புதிய பாட தொகுப்பில் நமது கணினி பாடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நாம் மிகுந்த வேதனையுற்றோம்.
 இருந்தாலும் அந்த அரசாணையை வரவேற்று நமது சங்கத்தின் கோரிக்கையாக கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக கலைப்பிரிவில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
அதனை பத்திரிகையிலே வரச்செய்தும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செய்தி வெளியிட்டோம்.
 இன்று மதுரையில் நமது பள்ளி கல்வி அமைச்சர் அவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கூடிய ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்தார்.
 கணினி ஆசிரியர்களின் நலனில் என்றைக்கும் அக்கறை கொண்டுள்ள கணினி ஆசிரியர்களின் வளர்ச்சியை தனது பிரதானமாக கொண்ட நமது சங்கம்,
அமைச்சரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர்களை வைத்தே பள்ளிக் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினோம் அதன் விளைவாக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் கலைப்பிரிவில் கணினி  பாடத்தைக் கொண்டுவருவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்ற உறுதியை அளித்துள்ளார்கள். மேலும் மாலை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரை தனியாக சந்தித்து கணினி ஆசிரியர்களின் குறைகளை அதேநேரத்தில் மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக கலைப்பிரிவில் கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடு பாடத்தை சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும்  தெளிவாக எடுத்துரைத்தோம். அதன் விளைவாக அவர் நிச்சயம் கலைப் பிரிவில் கணினியைக் கொண்டு வருகிறோம் என்ற உறுதியை அளித்துள்ளார்கள். கல்வித்துறையில் நடைபெற உள்ள மாற்றங்கள் குறித்தும் நம்முடைய விவாதித்தார்கள். என்னென்ன சீர்திருத்தங்கள் கொண்டு வரப் போகிறோம் என்பதனை எல்லாம் நம்மிடம் ஒரு 20 நிமிடங்களுக்கு மேலாக பேசினார்கள்.நாம் அதனை கேட்டுக் கொண்டு நம்முடைய கருத்தை அவருக்கு ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் கலைப்பிரிவில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரவேண்டும் என்று முறையிட்டோம். அவரும் செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளார்கள். ஆகவே நாம் மிகுந்த நம்பிக்கையோடு இருப்போம். இன்னும் அதிகாரிகள் சந்திப்பு மற்றும் பள்ளிக்கல்வி செயலர் அவர்களை சந்தித்து கலைப்பிரிவில் கணினி பாடத்தை கொண்டு வரும் வரும் வரும் வரை ஓயமாட்டோம்!
நம்பிக்கையோடிருங்கள் நண்பர்களே!
இச்செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த மதுரை மாவட்ட பொருளாளர் திரு.பரமசிவம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்!


ADSENCE ADD