*♈♈ஒரு பதிவில் 6 கல்விச் செய்திகள்*
*செய்தி 1*
*🛑🛑🛑இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை:
ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு*
*♦♦இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி நிரவல் மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது*
*♦♦தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் அ.சங்கர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோராக உள்ளனர்*
*♦♦தற்சமயம் பணிநிரவல் என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணி என்ற முறையில் மாதிரிப் பள்ளிகளுக்கும், அங்கன்வாடிகளுக்கும் கல்வி கற்பிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார்*
*♦♦இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநரிடம் முறையிடப்பட்டுள்ளது*
*♦♦மேலும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்களுக்கான கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வி இணை இயக்குனர், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் எவரையும் எவ்வித தொந்தரவும் செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்*
*♦♦அதன் அடிப்படையில், தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் என்ற அடிப்படையில் ஆணை வழங்கப்படவில்லை. மேலும் பணிநிரவல் என்பது ஒவ்வொரு பள்ளியிலும் இளையவர் யார் என்று கணக்கிட்டு அவர்களை பணிநிரவல் செய்வதுதான் விதியாக உள்ளது*
*♦♦அவ்வாறு பணியில் இளையவர் என்றாலும் இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவலில் ஈடுபடுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் வாய்மொழி உத்தரவுக்கிணங்க முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடைநிலை ஆசிரியர்களை மாதிரி பள்ளிக்கு பணி நிரவல் என்ற முறையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது*
*♦♦மேலும் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து மாற்றுப் பள்ளிக்கு கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் மற்றும் 100 கிலோ மீட்டர் தொலைவில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செப்டம்பர் 19-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது*
*♦♦அப்போது ஓரிரு நாள்களில் பிரச்னையை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை உத்தரவை ரத்து செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெற்று வந்த பதவி உயர்வு கலந்தாய்வும் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது*
*♦♦எனவே திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய பணி நிரவல் மாற்றுப் பணி நியமன ஆணையை ரத்து செய்து மீண்டும் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே ஆணை வழங்கவேண்டும்*
*♦♦இந்த கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்*
✳✳✳✳✳✳✳✳✳✳
*செய்தி 2*
*🛑🛑🛑அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குஅக்.3 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு*
*♦♦தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளது*
*♦♦தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது*
*♦♦அதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அரசு, அரசு உதவி நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன*
*♦♦இதையடுத்து, காலாண்டுத் தேர்வுகள் முடிந்து அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது பயாமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது*
*♦♦காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது சுமார் 6,800-க்கும் அதிகமான அரசு, அரசு உதவி நடுநிலைப்பள்ளிகளில் ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறையில் இருக்கும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன*
*♦♦ஆசிரியர்களுக்கு 12 இலக்க ஆதார் எண்ணில் கடைசி 8 எண்கள் அடையாளமாக வழங்கப்படும். அந்த எண் மற்றும் கைரேகையை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும்*
*♦♦அதன்பின் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு முதல் பதிவு வருகையாகவும், கடைசி பதிவு முடிவாகவும் எடுத்துக் கொள்ளப்படும். நவம்பர் மாதத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் முறை அமலுக்கு கொண்டு வரப்படும்என்றனர்*
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
*செய்தி 3*
*♦♦ஆசிரியர் பணி தேர்வர்கள் பயிற்சி பெற டி.ஆர்.பி., ஏற்பாடு*
*♦♦முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத உள்ளவர்கள், ஆன்லைன் வாயிலாக, கணினி பயிற்சி மேற்கொள்ளும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது*
*♦♦தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவியில், 2,144 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன*
*♦♦இதற்கான போட்டி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, வரும், 27, 28 மற்றும், 29ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வை, 154 மையங்களில், 1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர்*
*♦♦தேர்வு எழுதுவோருக்கு, முக்கிய அறிவிப்பு ஒன்றை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது*
*♦♦அதாவது, இந்த போட்டி தேர்வு, கணினி வாயிலாக நடக்க உள்ளது. அதனால், தேர்வின் தன்மைகளை தெரியும் வகையில், கணினி வழி மாதிரி தேர்வுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது*
*♦♦தேர்வர்கள், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண்ணை பயன்படுத்தி, மாதிரி கணினி வழி தேர்வில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். தேர்வு குறித்து புரிந்து கொள்ள பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
*செய்தி 4*
*♈♈♈மாணவியருக்கு பேரீச்சம் பழம் அரசு பள்ளிகளில் வழங்க உத்தரவு*
*♦♦அரசு பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி பெறும் மாணவியருக்கு, பேரீச்சம் பழம் உள்ளிட்ட, சத்தான பொருட்கள் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது*
*♦♦பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' என்ற வாசகத்துடன், பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன*
*♦♦இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது*
*♦♦இந்த பயிற்சிக்கு, ஆரோக்கியமான, திடகாத்திரமான மாணவியரை தேர்வு செய்து, அவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும், யோகா வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்*
*♦♦அதே நேரத்தில், பயிற்சிக்கு வரும் மாணவியருக்கு, வேர்க்கடலை, பேரீச்சம் பழம் உட்பட, விட்டமின் சத்துக்கள் நிறைந்த பொருட்கள் வழங்கவும், அதற்கு, அரசிடம் நிதி பெற்றுக் கொள்ளும்படியும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்*
✳✳✳✳✳✳✳✳✳✳✳
*செய்தி 5*
*🌐🌐🌐வெளிநாடுகளில் உள்ளது போல மாணவர்களுக்கு படிப்புடன் தொழில் பயிற்சி: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி*
*♦♦தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ளதுபோல படிப்புடன் தொழிற்பயிற்சியும் பெறவேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்*
*♦♦சென்னை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது*
*♦♦வெளிநாடுகளில் இருப்பதைப்போல், நம் நாட்டிலும் மாணவர்களை விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும் தொழிற்சாலைகள், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு தொழில்களில் முறையான பயிற்சி அளிக்க முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்*
*♦♦இதுபற்றி தமிழக முதல்வர் முழுமையாக ஆலோசித்து முடிவு செய்தவுடன், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் நமது மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்பை முடித்ததும் ஏதோவொரு தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும்*
*♦♦மேலும், தமிழகம் சார்பில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர், வீராங்கனைகள் வெற்றிபெற்று சாதனையாளராக திரும்பினால், அவர்களுக்கு தமிழக அரசு ஆக்கமும் ஊக்கமும் தருவதற்கு தயாராக உள்ளது*
♈♈♈♈♈♈♈♈♈♈♈
*செய்தி 6*
*✳✳✳கற்பித்தலில் புதுமை - கற்றலில் இனிமை*
*♦♦தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாணவர்களின் கற்றல் முறையை எளிமையாக்கவும் பள்ளியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் ஆசிரியர்கள் கையாண்டு வரும் வித்தியாச முயற்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன*
*♦♦தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர்*
*♦♦மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியின் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்*
*♦♦பள்ளியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, தூய்மையின் அவசியத்தை மாணவர்களுக்கு அவ்வப்போது எடுத்துரைக்கின்றனர்*
*♦♦எந்த ஒரு விஷயத்தையும் சிறு குழந்தைகளுக்கு வண்ணமயமாக காட்சிப்படுத்தும்போது, அவர்கள் குதூகலமடைவார்கள், காட்சிப்படுத்தும் பொருளும் அவர்களது மனதில் எளிதில் பதிவாகிவிடும்*
*♦♦இதனை மனதில் கொண்டு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் தரைதளம் மற்றும் சுவர்களில், உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, அதேபோல் ஆங்கில எழுத்துகளை வண்ணமயமான ஓவியங்களாக அவர்கள் வரைந்து வைத்துள்ளனர். அதன் மீது நடந்தும் குதித்தும் எளிமையாக கற்றுக்கொள்கின்றனர்*
*♦♦ஆங்கில வினைச்சொற்கள், இணைப்புச் சொற்கள் உள்ளிட்டவை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் விளக்குகின்றனர். இதன் மூலம் ஆங்கிலம் கற்பது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக மாறுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்*
*♦♦மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வதால் கற்பித்தலும் தங்களுக்கு எளிதாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்*
*♦♦இது மட்டுமல்லாது, தாவரங்களின் பெயர்கள், தானியங்களின் பெயர்கள், தானியங்களின் மருத்துவகுணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வகுப்பறை முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது*