NEWS

Search This Blog

Saturday, 21 September 2019

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் வகையில்,

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் வகையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

➤அதன்படி, வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

➤சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உலர்ந்த புளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

➤ஓட்டல் மற்றும் தங்கும் விடுதியின் தினசரி வாடகை ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை உள்ள ஓட்டல் மற்றும் விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  7500 ரூபாய்க்கு மேல் வாடகை உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

➤இலைத்தழைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் தயாரிக்கப்படும் கப்புகள், தட்டுகளுக்கான ஜிஎஸ்டி, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

➤10 முதல் 13 பேர் பயணிக்கும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு, 1 சதவீதமாகவும், டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

➤இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோர் கால்பந்துப்  போட்டிகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளுக்களும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

➤மேலும், நெசவு மற்றும் நெசவு அல்லாத பாலிதீன் பைகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ADSENCE ADD