தமிழகத்தில் இந்தாண்டு புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: ‘மருத்துவத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு, தமிழகத்தில் இந்தாண்டு ஆறுபுதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. முதற்கட்டமாக தொழில்நுட்ப குழு மனுவை ஆராய்ந்து அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிறகு விரைவில் DIPR சமர்பிக்கப்பட்டு, விரைவில் செயல்திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகள் அதற்கு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளதுஉள்ளது. இந்த கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இனி புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் பட்சத்தில், சுமார் ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் படிக்கும் வசதிகள் உருவாகும்’ இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.