NEWS

Search This Blog

Tuesday, 12 November 2019

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!....!

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!

*டிசம்பர்
27 மற்றும் 28 எனத் தகவல்!*

பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக் கல்லூரிகளின் தேர்வு அட்டவணைகளும் கோரப்பட்டுள்ளன.

அதன்படி தேர்வுகள் முடிந்த பின்னர் உள்ளாட்சித்தேர்தலை நடத்தலாம் என திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்வுக்கு பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் அட்டவணைகளை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ADSENCE ADD