NEWS

Search This Blog

Tuesday, 14 August 2018

ஆக.16 முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு:தமிழக அரசு அறிவிப்பு

 ஆக.16 முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு:தமிழக அரசு அறிவிப்பு

*தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை*


*10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம்
ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் (https://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது*


*இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து 16.8.2018 முதல் 30.8.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது*
*(மின்னல் கல்விச் செய்தி) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்*


*மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்*


*ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்*



ADSENCE ADD