NEWS

Search This Blog

Friday, 10 August 2018

B.Arch., படிப்பில் சேர வரும், இன்று (ஆகஸ்டு-10ல்) கவுன்சிலிங்

B.Arch., படிப்பில் சேர வரும், இன்று (ஆகஸ்டு-10ல்) கவுன்சிலிங்

பி.ஆர்க்., படிப்புக்கு, இன்று, 10ம் தேதி கவுன்சிலிங்நடத்தப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.*
*அண்ணாபல்கலை இணைப்பு கல்லுாரிகளில், 50க்கும்
மேற்பட்டவற்றில், பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்தக் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் உள்ள, 2,200 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அண்ணா பல்கலை சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 1,824 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூலை, 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.*

*இந்நிலையில், மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் அடிப்படையில், இன்று, ஆகஸ்டு 10ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.*

*இன்று காலை, 8:00 மணிக்கு, மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு கவுன்சிலிங் நடக்கும். 9:00 மணி முதல், பொது பிரிவு மாணவர்களுக்குகவுன்சிலிங் நடக்கும்.இதற்கான பட்டியல், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ADSENCE ADD