NEWS

Search This Blog

Friday, 21 September 2018

*மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கவனத்துக்கு

*நீலகிரி மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சனிக்கிழமைகளில்
நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்*


*இதுகுறித்த அறிக்கை விவரம்*


*நீலகிரி மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன்  பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளியின் வேலை நேரத்துக்கு மிகாமல் பாட வகுப்புகளைத் திட்டமிடவும்,  கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பெற்றோரின் எழுத்துப்பூர்வமான விருப்பத்துடன் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது*


*மேலும், இந்நடைமுறையை அமல்படுத்தாத பள்ளிகளின் மீது புகார் பெறப்பட்டால்  அப்பள்ளி நிர்வாகியின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*

*SOURCE DINAMANI WEBSITE*

ADSENCE ADD