NEWS

Search This Blog

Friday, 21 September 2018

அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்: முதன்மைச் செயலர் சு.ஜவஹர்

*அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்: முதன்மைச் செயலர்
சு.ஜவஹர்*


*அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய பணி பதிவேட்டை தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கமுடியும் என தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்*


*தென்காசியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது*


 *தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 9 லட்சம் ஊழியர்களுக்கு ஊதியம், 7 லட்சம் அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கி வருகிறோம்*


*ஓய்வூதியர்களுக்காக பலசிறப்பு திட்டங்கள் உள்ளன.  ஏற்கெனவே இருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் 2018  அறிவிக்கப்பட்டுள்ளது*


*ரூ.2 லட்சமாக இருந்த தொகை 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம்  முழுவதும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் என 12 லட்சம் பேர் பயனடைவர்*



*கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் தமிழகம் முழுவதும் அனைத்துஅரசு திட்டங்களுடைய வரவு செலவுகளை 294 அலுவலகம் மூலம் செயல்படுத்தி வருகிறோம்*


*சென்ற நிதியாண்டில் அரசின் செலவு 1 லட்சத்து 70ஆயிரம் கோடியாகும். முக்கிய செலவினம் என்பது அரசு ஊழியர்களுடைய மாத ஊதியம், ஓய்வூதியம், அரசின் நலத் திட்டங்களுடைய செலவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சாலை வசதி, பொதுப்பணித்துறை கட்டடங்கள்கட்டுவது உள்ளிட்டவையாகும்*



*புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுதிட்டத்தின் மூலம் 15 நிமிடத்தில் பணிகள் முடியும். காலையில் பில் மாலையில் பணம் என்பது தான் எங்கள் நோக்கம்*


 *இத்திட்டத்தின் சிறப்பம்சம் தமிழக அரசில் பணியாற்றும்,  கருவூலம் மூலம் ஊதியம் பெறும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணி பதிவேடு கணினி மயமாக்கப்படும். அதன் மூலம் பணி பதிவேடு தீ விபத்து, தொலைந்து விட்டது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்*


*தங்களுடைய பணி பதிவேடுகள் குறித்த விவரங்களை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களுடைய செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்*


*அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணி ஓய்வு நாளன்று அனைத்து சலுகைகளும், ஓய்வூதியத்துக்கான உத்தரவும் வழங்கப்படும் என்றார் அவர்*


*SOURCE DINAMANI WEBSITE*

ADSENCE ADD