NEWS

Search This Blog

Friday, 21 September 2018

ராகிங்' தடுப்புக்கு 'மொபைல் ஆப்' அண்ணா பல்கலை உருவாக்கம்


அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென,
தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது*


*இதை, அனைத்து பல்கலைகளிலும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் மேலாண்மை அமைப்பு என்ற பெயரில், அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் பிரிவு சார்பில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது*


 *அலைபேசியில் உள்ள, 'ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்' பகுதியில், 'எஸ்.சி.எம்.எஸ்., அண்ணா பல்கலை' என்ற பெயரில் உள்ள இதை, பதிவிறக்கம் செய்யலாம்.இதில், மாணவர்கள், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்*


*முதல் கட்டமாக, சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி; குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி; கிண்டி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றின் *மாணவர்கள், இந்த* *ஆப்' வசதியை* *பயன்படுத்தஉள்ளனர்*


*இதில், ராகிங் குற்றத்துக்கான தண்டனை விபரம், புகார் செய்ய வேண்டிய முகவரி, அலைபேசி எண், அவசர உதவிக்கான அழைப்பு எண் போன்றவை உள்ளன*


*விரைவில், மற்ற பல்கலைகளின் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில், இது விரிவுபடுத்தப்பட உள்ளதாக, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்*

*SOURCE DINAMALAR WEBSITE*

ADSENCE ADD