NEWS

Search This Blog

Saturday, 21 September 2019

யூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த 14 வயது சிறுமி உயிரிழந்த

சீனாவில் யூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த 14 வயது சிறுமி உயிரிழந்த
விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோ பதிவர் மன்னிப்பு கோரியுளிள்ளார்.
யியா (Yeah) என்ற பெண் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 4 கோடி பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். அவர், காலியான பெப்சி டின்னைக் கொண்டு பாப்கார்ன் செய்வது எப்படி என வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதைப் பார்த்த ஸெ ஸெ (zhe zhe) என்ற 14 வயது சிறுமி, தனது தோழியுடன் சேர்ந்து அதேபோல் பாப்கார்ன் செய்ய முயற்சித்தார். ஆனால், ஆல்கஹால் டின்னை பயன்படுத்தியதால், திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
93 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட சிறுமி 2 வார சிகிச்சை பலனளிக்காமல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி 13 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் உயிரிழப்புக்கு யூடியூபில் வீடியோ போட்ட வீடியோ பதிவர் தான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள அந்த இளம்பெண், இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளார். எச்சரிக்கை வாசகம் குறிப்பிடாதது தன் தவறுதான் என்றாலும், சிறுமி, தான் பயன்படுத்திய அதே கருவிகளை பயன்படுத்தவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

ADSENCE ADD