NEWS

Search This Blog

Saturday, 21 September 2019

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*
*ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என
, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது*
*மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், வழக்கமான தேர்வு நடத்த வேண்டும்*
*தேர்வு நடத்துவது தொடர்பாக, மாநில அரசுகள் சுயமாக முடிவு எடுக்க லாம் என, இந்த ஆண்டு மார்ச்சில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, நடப்பு கல்வி ஆண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது*
*இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்*
*சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற, மத்திய கல்வி வாரியங்கள், இன்னும் முடிவெடுக்காத நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த அறிவிப்பால், பல்வேறு நடைமுறை குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. தற்போதைய நடைமுறைப்படி  முப்பருவ பாடமுறை அமலில் உள்ளது*
*இதன்படி, மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வு, இரண்டாம் பருவ தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் பாட வாரியாக, தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. முதல் பருவ தேர்வு முடிந்ததும், அந்த பாட புத்தகங்களை பயன்படுத்துவதில்லை*
*அடுத்த பருவ தேர்வில், முதல் பருவ தேர்வுக்கான பாடங்களில் இருந்து, கேள்விகளும் இடம் பெறாது. இரண்டாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும், மூன்றாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும் புத்த கங்கள் வழங்கப்படும். அந்தந்த பருவ தேர்வுக்கு, அந்தந்த பாடப் புத்தங்களை மட்டுமே படிக்க வேண்டும். முந்தைய பருவ பாடங்களை படிக்க தேவையில்லை*
*இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததால், மாணவர்கள், ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் மொத்த பாடங்களையும் படித்தாக வேண்டும்.அப்படியென்றால், முதல் பருவ பாடங்களை, இரண்டாம் பருவத்துக்கும், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களை, மூன்றாம் பருவ தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டியதிருக்கும்*
*இதனால், மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், புத்தக சுமையும் அதிகரிக்கும். மேலும், பொது தேர்வு முறை அமலானால், முப்பருவ பாட முறையை, ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடர் மதிப்பீட்டு முறை என்ற, சி.சி.இ.,நீக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஓராண்டு பாடங்கள் அனைத்தையும், மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கூடுதல் வேலை நாட்களும், நேரமும் தேவைப்படும்*
*எனவே, சி.சி.இ., முறைக்கு தேவையான, பாடம் தொடர்பான இணை செயல்பாடுகளில், மாணவர்களால் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். அதேபோல், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, தொடர்ந்து அடிப்படை கல்வி கிடைப்பதிலும், சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக, கல்வியாளர்கள் கருதுகின்றனர்*

        
            *செய்தி 2*
*5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? அமைச்சர் விளக்கம்*
*♦♦ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்திற்கு, பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு, பொதுத்தேர்வு நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான், முழுமையாக அமல்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்*
*♦♦சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது*
*♦♦பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப் டாப்' வழங்குவது போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், இலவச லேப் டாப் வழங்கப்படும். மேலும், 20 லட்சம் மாணவர்களுக்கு, கையடக்க கணினி வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும், இணையதள வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்*
*♦♦ பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது*
*♦♦இந்தியா முழுவதும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது*
*♦♦மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே, கற்றல் மற்றும் கற்பித்தல் அளவை மேம்படுத்தவும், இது நடைமுறைக்கு வருகிறது.தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது*
*♦♦ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், இந்த ஆண்டு, பொதுத் தேர்வு எழுத வேண்டும படிப்படியாக, மாணவர்கள் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது*
*♦♦மூன்று ஆண்டுகளுக்கு பின், முழுமையாக அமல்படுத்தப்படும். இத்திட்டம், பொது மக்கள் மற்றும் பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது*
*♦♦தேர்வு கட்டணம் இல்லை. பத்தாம் வகுப்பில், தமிழ் தேர்வு, ஒரே தாளாக இருக்கும். கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்தினோம். இரு மொழி கொள்கையில், தமிழக அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்*

              *செய்தி 3*
*ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு ஆன்லைனில் எழுத வற்புறுத்துவதற்கு எதிர்ப்பு : அரசு பரிசீலனை செய்ய கோரிக்கை*
*பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுகளை ஆன்லைனில் எழுத வற்புறுத்துவது பட்டதாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழைய முறைப்படி தேர்வை நடத்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்*
*தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12ம் தேதி வெளியிட்டது. தேர்வு செப்டம்பர் 27 முதல் 29ம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வு ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது*
*கம்ப்யூட்டர் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத முடியும். மற்ற பிரிவுகளில் படித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, அறிவு இருப்பது கடினம். கம்ப்யூட்டரை பயன்படுத்துவதில் குறைந்த அறிவே உள்ளது*
*மொத்தம் 150 கேள்விகளுக்கு 3 மணிநேரத்தில் கம்ப்யூட்டரில் பதில் தர வேண்டும்*
*இது மிக கடினமான விஷயம். கீ ஆன்சரை சரிபார்க்கவும் முடியாது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகூட ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுவதில்லை. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்படவில்லை*
*ஏற்கனவே, கடந்த ஜூன் 23ல் நடத்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் ஆன்லைனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்  அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. அந்த தேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டது*
*கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் தேர்வை நடத்த அனுபவமும் அதற்கான கட்டமைப்பும்  இல்லாமல் எப்படி தேர்வை நடத்த முடியும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு 3 லட்சம்பேர் விண்ணப்பித்துள்ளனர். கம்யூட்டர் அறிவு இல்லாமல் எப்படி இந்த தேர்வை எழுத முடியும்*
*ஏற்கனவே, உரிய வேலை வாய்ப்பு இல்லாமல் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். எங்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பயிற்சி இல்லாத நிலையில் எங்களால் எப்படி ஆன்லைன் மூலம் தேர்வு எழுத முடியும்*
*இதனால், கிராமப்புறத்தில் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது*
*எனவே, எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து ஏற்கனவே நடத்தும் தேர்வைப்போல் எழுத்து தேர்வாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்*
*இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.தமிழ்வேல் ஆஜராகி, கம்ப்யூட்டர் பயிற்சி இல்லாதவர்களால் ஆன்லைனில் தேர்வு எழுதுவது கடினம். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்*
*இதைக்கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை வரும் 25ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்*
♦♦♦♦♦♦♦♦♦♦

ADSENCE ADD