NEWS

Search This Blog

Friday, 4 October 2019

ஆசிரியர் கைது, சக ஆசிரியர்கள் போராட்டம்!!

இலவச லேப்டாப் கேட்ட முன்னாள் மாணவர் மீது தாக்குதல்! ஆசிரியர் கைது, சக ஆசிரியர்கள் போராட்டம்!!


கடலூரில் அரசின் இலவச லேப்டாப் கேட்டு தகராறில் ஈடுபட்ட மாணவரை, உடற்கல்வி ஆசிரியர் சராமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், சகஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அரசின் இலவச லேப்டாப் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது பள்ளி படிப்பு முடிவடைந்த நிலையில், இலவச லேப்டாப் கிடைக்காமல் விரக்தியடைந்த சில மாணவர்கள், நேராக பள்ளிக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் இலவச லேப்டாப் தாருங்கள் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

ADSENCE ADD