NEWS

Search This Blog

Friday, 4 October 2019

டிஆர்பி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு

டிஆர்பி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி தேர்வு கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்பட்டு தேர்வானது 29 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 154 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தரும் விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அவர்களது பணியை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். மேலும் 9 முதல் 12 வரையிலான பள்ளி வகுப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என தெரிவித்தார்.

ADSENCE ADD