25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
சி.பி.எஸ்.இ ஸ்கூல்ஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்பேசியதாவது:
இன்று படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும், சிறந்த கல்வி கொடுக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிதாக கொண்டு வந்துள்ள பாடத்திட்டம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. அதை உருவாக்கும் வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரும் உயர் அதிகாரிகளை அழைத்து அந்த பணிகளை மேற்கொள்வதாக பேசியுள்ளார். அந்த அளவுக்கு நம்முடைய கல்வி முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.